மாபெரும் தமிழ்க்கனவு 2025
13/ 8 /2025 அன்று காலை 10 மணிக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்ற “மாபெரும் தமிழ்க்கனவு 2025” நிகழ்ச்சியில் கல்லூரியில் 50 மாணவிகள் கலந்து கொண்டார்கள். திருமதி சி. வள்ளி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர், திருமதி ப செல்வி, தமிழ் துறை மற்றும் திருமதி வெண்மதி தமிழ் துறை பேராசிரியர்கள் மாணவிகளை அழைத்துச் சென்று இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். இந்நிகழ்ச்சியில் சிறந்த கேள்வியாளர் நேரத்தில் சிறந்த கேள்வி கேட்ட முதலாமாண்டு உயிர் தொழில்நுட்பவியல் மாணவி ஜெருசதா மற்றும் சிறந்த பேச்சாளர்களுக்கான “பெருமிதச் செல்வி” என்ற விருது முதலாம் ஆண்டு இயற்பியல் துறை மாணவி கங்கா அவர்கள் பெற்றுள்ளார்கள். பரிசு பெற்றுள்ள மாணவி முதல்வர் முனைவர் மணிமேகலை ஜெயபால், அவர்களிடத்தில் வாழ்த்து பெற்றுள்ளத் தருணம்.




